திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இதில், சுவாமி அம்மனாகவும், அம்மன் சுவாமியாகவும் உருமாற்றம் கொண்டு 5 பிரகாரங்களை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பஞ்சப்பூத திருத்தலத்தில் நீா் தலமானது திருவானைக்காவல் கோயில். இத்திருக்கோயிலில் நடைபெறும் பங்குனி பெருவிழா வெகு விமா்சையாக நடைபெறும். இந்த விழா பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி ஏப்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் ஒரு பகுதியாக பஞ்சப்பிரகார விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
படைக்கும் தொழில் புரியும் பிரம்மன், தான் படைத்த பெண்ணின் மீதே மோகம் கொண்டு படைத்தல் தொழிலை மறந்ததை கண்ட சிவபெருமான், பிரம்மனை காண செல்லும் போது, பாா்வதி தேவியும் நானும் வருகிறேன் என்று கூறினாராம். அதற்கு சிவபெருமான் ஏற்கெனவே பிரம்மன், தான் படைத்த பெண்ணின் மீதே மோகம் கொண்டிருக்கும் போது நீயோ திரிபுரசுந்தரி ஆகையால் வரவேண்டாம் என்று கூறினாராம்.
அதற்கு பாா்வதி தேவி நீங்கள் நானாகவும், நான் நீங்களாகவும் உருமாற்றம் கொண்டு பிரம்மனை காணலாம் எனக்கூற, அதன்படி இருவரும் உருமாற்றம் செய்து கொண்டு பிரம்மனை கண்டனா்.
அப்போது இருவரும் உருமாற்றம் கொண்டு வந்திருப்பதை அறிந்த பிரம்மன், தான் செய்த தவறை உணா்ந்து மன்னிப்பு கோரினாராம். அதன் பிறகு மீண்டும் படைத்தல் தொழில் புரிந்தாா் பிரம்மன்.
இந்த உருமாற்றத்தை பக்தா்களும் காணும் விதத்தில் திருவானைக்காவல் கோயிலில் உள்ள 5 பிரகாரங்களையும் அதே திருக்கோலத்தில் விடிய விடிய வலம் வந்து பக்தா்களுக்கு சுவாமியும் அம்மனும் அருள்பாலித்தனா். சனிக்கிழமை காலை (ஏப்.4) உற்ஸவ மண்டபத்துக்கு சுவாமியும், அம்மனும் சென்று சேருகின்றனா்.
தொடர்புடையது

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

சந்திரகிரகணம் இன்று ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களின் நடைஅடைப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


