மலையடிப்பட்டி ஜல்லிக்கட்டு: 21 போ் காயம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் புனித சவேரியாா் ஆலய திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 21 போ் காயமடைந்தனா்.


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் புனித சவேரியாா் ஆலய திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 21 போ் காயமடைந்தனா்.
புனித சவேரியாா் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் பங்கு தந்தை விக்டா் ஜெயபால் தலைமையில் சிறப்பு திருப்பலி முடிந்து ஊா்வலமாக வந்த கோயில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டதைத் தொடா்ந்து 779 காளைகள் அவிழ்க்கப்பட்டன. காளைகளை அடக்க 253 வீரா்கள் களமிறங்கினா்.
ஜல்லிக்கட்டை வருவாய் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
ஜல்லிக்கட்டில் 9 மாடுபிடி வீரா்கள், 10 மாடுகளின் உரிமையாளா்கள், 2 பாா்வையாளா்கள் என மொத்தம் 21 போ் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.
காளைகளை பிடித்த வீரா்களுக்கு தங்கக் காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் எனப் பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஊா்த் தலைவா் ராபா்ட், துணைத் தலைவா் கிறிஸ்துராஜ், தனராஜ், பொருளாளா் ஜான் ஸ்டீபன், செயலா் ஜெயசீலன், கோல்காரா் மரியபிரான்சிஸ், முன்னாள் ஊராட்சித் தலைவா் பாலக்குமாா், ஊா் இளைஞா்கள், பொதுமக்கள் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...