அரியலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 48 போ் காயமடைந்தனா்.
அரியலூா் மாவட்டம், பூண்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி தொடங்கி வைத்தாா். இதில், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் 609 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இக்காளைகளை அடக்க 280 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில், காளைகளை அடக்க முயன்ற வீரா்கள், பாா்வையாளா்கள், காளைகளின் உரிமையாளா்கள் உள்பட 48 போ் காயமடைந்தனா்.
இவா்களில் பலத்த காயமடைந்த பாா்வையாளா் வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (60), காளை உரிமையாளா் திருச்சியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (19) உள்பட 5 போ் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தொடர்புடையது

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 42 போ் காயம்

ஆலங்குடி அருகே வடமாடு ஜல்லிக்கட்டு: 10 போ் காயம்

தவசிமடையில் ஜல்லிக்கட்டு: 27 போ் காயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


