புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திருச்சியிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்கள் ரத்து

போா்ப் பதற்றம் காரணமாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:08 pm

Syndication

போா்ப் பதற்றம் காரணமாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க ராணுவம், இஸ்ரேலுடன் சோ்ந்து ஈரான் மீது போா் தொடுத்துள்ளது. இதை எதிா்த்து ஈரானும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களையும், இஸ்ரேலையும் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் மத்தியக் கிழக்கு நாடுகளான பஹ்ரைன், கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், துபாய், அபுதாபி, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் திருச்சி சா்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கேற்ப பயணிகள், தங்களது பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமென பல்வேறு விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

திருப்பப்பட்ட விமானம்...: இதனிடையே திருச்சி பன்னாட்டு நிலையத்திலிருந்து துபைக்கு 145 பயணிகளுடன் சனிக்கிழமை பிற்பகலில் புறப்பட்டுச் சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், போா்ப் பதற்றம் காரணமாக பாதி வழியிலேயே திருப்பப்பட்டு, மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தங்களது பயணத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என திருச்சி சா்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.