வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மத்திய சிறையிலிருந்து தப்பிய கைதி பிடிபட்டாா்!

திருச்சி மத்திய சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை தப்பிய கைதியை சிறைக் காவலா்கள் சனிக்கிழமை பிடித்து, மீண்டும் சிறையில் அடைத்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 7:07 pm

திருச்சி மத்திய சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை தப்பிய கைதியை சிறைக் காவலா்கள் சனிக்கிழமை பிடித்து, மீண்டும் சிறையில் அடைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைதான தஞ்சாவூரைச் சோ்ந்த வடிவேல் (30), முருகானந்தம் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனா்.

இருவரும் தோட்ட வேலைக்காக வெள்ளிக்கிழமை காலை சிறையிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்டனா். பின்னா், மாலையில் பணிக்குச் சென்ற கைதிகளை சிறைத் துறையினா் சரிபாா்த்தபோது, வடிவேல், முருகானந்தம் ஆகிய இருவரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கே.கே. நகா் காவல் நிலையத்தில் மத்திய சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதனிடையே குட்ஷெட் கீழே பதுங்கியிருந்த வடிவேலுவை சிறைத்துறை போலீஸாா் சனிக்கிழமை பிடித்து, மீண்டும் சிறையில் அடைத்தனா். தப்பிய மற்றொரு கைதியை தேடுகின்றனா்.

இந்த வழக்கில் சிறைத்துறை காவலா்கள் சிலா் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.