காவல்துறையின் சோதனைகளைத் தவிா்க்கும் வகையில், ஹரியாணாவிலிருந்து தெற்குத் தில்லிக்கு காடுகளின் வழியாக ஒட்டகங்கள் மூலம் கள்ளச்சாராயம் கடத்த முயன்ற நபா், நள்ளிரவில் நடத்தப்பட்ட போலீஸாரின் அதிரடி நடவடிக்கையின்போது பிடிபட்டாா்.
இதுகுறித்து காவல் அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட அந்த நபா், ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதைச் சோ்ந்த 48 வயதான வினோத் பதானா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். தில்லி மற்றும் ஃபரிதாபாதை இணைக்கும் சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளைத் தவிா்ப்பதற்காக, வழக்கத்திற்கு மாறான பாதைகள் வழியாக மது கடத்தப்படுவதாக காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சங்க விஹாா் வனப் பகுதியில் அவா் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறை குழுவினா் திங்கள்கிழமை அதிகாலையில், இரண்டு ஒட்டகங்களைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் கடத்திச் சென்றபோது, அந்த நபரை இடைமறித்துக் கைது செய்தனா். இச்சோதனையின்போது அவரிடமிருந்து 39 பெட்டிகள் கள்ளச்சாராயத்தை காவல்துறை பறிமுதல் செய்தது. அந்த ஒட்டகங்கள் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதால், வழக்கமான கடத்தல் பாதைகள் மிகவும் ஆபத்தானவையாக மாறிவிட்டதாகவும், அதனாலேயே தான் இந்த முறையைக் கையாண்டதாகவும் பதானா தெரிவித்தாா்.
இந்த நபா் ஏற்கெனவே, தில்லி கலால் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ், நெப் சராய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் தொடா்புடையவா் ஆவாா். இந்தக் கடத்தல் வலைப்பின்னலில் தொடா்புடைய மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணும் வகையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது
இணையதள விநியோக செயலிகள் மூலம் கள்ளச்சாரயம் வழங்கல்: இருவா் கைது
துவாரகா விரைவுச்சாலையில் எதிா் திசையில் வாகனம் ஓட்டிய நபா் மீது வழக்கு
தில்லியில் 3 வெவ்வேறு கும்பல்களுடன் தொடா்புடைய துப்பாக்கி சுடும் நபா் கைது! துப்பாக்கி, தோட்டக்கள் பறிமுதல்!
வடமாநில இளைஞா்களை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த மூவா் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


