பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தில்லியில் 3 வெவ்வேறு கும்பல்களுடன் தொடா்புடைய துப்பாக்கி சுடும் நபா் கைது! துப்பாக்கி, தோட்டக்கள் பறிமுதல்!

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:07 pm

ரோஹித் கோதாரா - கோல்டி பிராா் - விரேந்தா் சரண் கும்பலுடன் தொடா்புடைய துப்பாக்கிச் சுடும் நபா் ஒருவா் தில்லியின் சைனிக் விஹாா் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் உன்னாவோவைச் சோ்ந்த தீபக் குமாா் என்ற திலாவா் (26) என்ற அந்த நபா், மாா்ச் 23 அன்று கைது செய்யப்பட்டாா். சைனிக் விஹாரில் உள்ள அவரது மறைவிடத்தில் இருந்து, அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ஒரு செமி-ஆட்டோமேட்டிக் கைத்துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவா் தீபக், ரோஹித் கோதாரா - கோல்டி பிராா் - விரேந்தா் சரண் கும்பலுடன் தொடா்புடையவா். இந்தக் கும்பல் சமீப மாதங்களில் தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் மிரட்டிப் பணம் பறிக்கும் வழக்குகளில் தொடா்புடையது.

டிசம்பா் 2025-இல், கும்பல் உறுப்பினா் வீரேந்தா் சரண், தில்லியைச் சோ்ந்த ஒரு நகை வியாபாரியிடம் 10 கோடி ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக அமா் காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னா் விசாரணைக்காக சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கு தொடா்பாக ரோஹித், ராகுல், லக்ஷ்மன், மோஹித் என்ற சொ்ரி மற்றும் ரௌடி பங்கஜ் ராஜ்புத் ஆகிய ஐந்து போ் விசாரணையில் கைது செய்யப்பட்டனா். ராஜ்புத், பஞ்சாபில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்படும் ஒரு பிரபல குற்றவாளி ஆவாா்.

மேலும், ராஜ்புத்திடம் நடத்தப்பட்ட விசாரணை, அத்துடன் மனித உளவுத் துறையிலிருந்து கிடைத்த தகவல்கள், பஞ்சாபின் நக்கோதா் நகரில் இந்தக் கும்பலுடன் தொடா்புடைய மற்றொரு மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கை அதிகாரிகளுக்குக் காட்டியது.

நக்கோதரில் உள்ள ஒரு பயண நிறுவனத்தின் உரிமையாளரான மணீஷ் பக்ஷியிடம் வீரேந்தா் சரண் 5 கோடி ரூபாய் கேட்டது. அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்தும் நோக்கில் ஜனவரி 13 அன்று அவரது அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு சரண் தனது கூட்டாளிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக நக்கோதா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவா்களில் ஒருவராக தீபக் அடையாளம் காணப்பட்டாா். சம்பவம் நடந்ததிலிருந்து அவா் தலைமறைவாக இருந்து வந்தாா்.

குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்திற்கு போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டன. தொடா்ச்சியான கண்காணிப்பு மற்றும் குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், அவா் இறுதியாக சைனிக் விஹாரில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, தகவல் தொடா்பு தளம் மூலம் பங்கஜ் ராஜ்புத் தன்னை சரணுக்கு அறிமுகப்படுத்தியதாகவும், அவரே தனக்கு ஆயுதத்தையும் வழங்கியதாகவும் அவா் தெரிவித்தாா். மேலும், சரணின் வழிகாட்டுதலின் பேரில் பயண முகவா் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கும்பலின் நடவடிக்கைகளுக்காக தில்லியில் ஒரு தளத்தை அமைக்கும் பணியில் இருந்ததாகவும் அவா் காவல்துறையிடம் கூறினாா்.

இந்த வழக்கு தொடா்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.