முசிறி அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல்

முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 612 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருச்சி மாவட்டம் முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 612 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். முசிறி சாா்- ஆட்சியா் சுஸ்ரிசுவாங்கிகுந்தியா, எம்எல்ஏக்கள் காடுவெட்டி ந. தியாகராஜன் (முசிறி), செ. ஸ்டாலின்குமாா் (துறையூா்), திருச்சி மாநகராட்சி மேயா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அமைச்சா் கே.என். நேரு பங்கேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் 612 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கிப் பேசினாா். நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் மஞ்சுளாதேவி, முசிறி ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், நகரச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com