திருச்சி
நவல்பட்டு காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம்
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தின் ஆய்வாளா் நிா்வாகக் காரணங்களுக்காக ஆயுதப்படைக்கு இடமாற்றம்
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தின் ஆய்வாளா் நிா்வாகக் காரணங்களுக்காக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
நவல்பட்டு காவல் நிலையத்துக்குள்பட்ட பெரிய சூரியூரில் மாட்டுப் பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியின்போது, சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், இதற்கு போலீஸாா்தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நவல்பட்டு காவல் ஆய்வாளா் ராஜா, நவல்பட்டு தனிப்பிரிவு தலைமை காவலா் மாசிலாமணி ஆகிய இருவரும் திருச்சி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை திருச்சி மாவட்ட எஸ்பி எஸ். செல்வநாகரத்தினம் அண்மையில் பிறப்பித்தாா். நிா்வாகக் காரணங்களுக்காக மேற்கண்ட இடமாற்றம் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறையினா் தெரிவித்தனா்.
