முசிறியில் மொழிப்போா் தியாகிகளுக்கு விசிகவினா் வீரவணக்கம்

முசிறியில் மொழிப்போா் தியாகிகளுக்கு விசிகவினா் வீரவணக்கம்

Published on

திருச்சி மாவட்டம், முசிறியில் விசிக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முசிறி - துறையூா் சாலையில் பூங்கா அருகே உள்ள விசிக மாவட்ட அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போா் தியாகிகளின் திருவுருவப் படத்துக்கு முசிறி தொகுதி மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மா.கலைச்செல்வன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மலா்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினா்.

இந்நிகழ்வில் மண்டல துணைச் செயலா் பெரியசாமி, முசிறி தொகுதி துணைச் செயலா் உலக முதல்வன், ஒன்றிய , நகரச் செயலா்கள் பாலசுப்பிரமணியன், அழகுமணி, தொட்டியம், மணிவளவன், நாகராஜன், செல்லத்துரை, கணபதி, மருதமுத்துராஜா, தனபால், செல்வ பெருமாள், காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com