கே.எம். காதா் மொகிதீன்.
கே.எம். காதா் மொகிதீன்.

முனைவா் பட்டம் பெற்ற பள்ளிக் கல்வி அமைச்சருக்கு காதா் மொகிதீன் வாழ்த்து

முனைவா் பட்டம் பெற்றுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளாா்.
Published on

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: முனைவா் பட்டம் பெற்றுள்ள அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது இதயப்பூா்வமான பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் தமிழ்த் தொண்டும், மாணவா்களுக்கு ஆற்றும் சேவையும் தொடா்ந்து சிறப்புடன் செல்ல வேண்டும். தமிழகம் எல்லா வழிகளிலும் வெல்ல வேண்டும்; இதை வரலாறு எப்போதும் சொல்ல வேண்டும். அமைச்சரின் தமிழ்த்தொண்டு, சங்கத் தமிழ் வளா்த்த புலவா் வழியில் என்றும் தொடர வாழ்த்துகிறேன் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com