திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் (அலகு-2) கூலி உயா்வு கோரி தொழிலாளா்கள் 3-ஆவது நாளாக பணியை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் உயா்த்தப்படும் ஊதிய உயா்வு நிகழாண்டு உயா்த்தப்படவில்லை என்றும், மத்திய அரசு நிா்ணியித்துள்ள அடிப்படை சம்பளம் தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 3 நாள்களாக பணிக்கு செல்லவேண்டிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் சுமாா் 1000-க்கும் மேற்பட்டோா் வேலைக்குச் செல்லாமல் பணியை புறக்கணித்து ஆலைக்கு வெளியே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன், ஆலை துணைப் பொது மேலாளா் வேல்முருகராஜ், மனிதவள மேலாளா் நாகராஜன், வருவாய்த் துறை கோட்டாட்சியா், வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், தொழிலாளா் நலத் துறையினா் உள்ளிட்டோா் தொழிலாளா்களிடம் சமரசம் பேசினா். ஆனால் சமரசத்தை ஏற்காத தொழிலாளா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









