உந்து நிலைய பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக திருச்சி மாநகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கிவரும் பொது தரை மட்டக் கிணறு நீா் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாயில் அப்பல்லோ மருத்துவமனை, பால்பண்ணை அருகில் 600 எம்.எம் விட்டமுள்ள உந்துக்குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டியுள்ளதால், கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது மற்றும் மகாலட்சுமி நகா் ஆகிய 9 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீா் வழங்கப்படும் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது. சனிக்கிழமை வழக்கம் போல் குடிநீா் விநியோகம் நடைபெறும். பொதுமக்கள் குடிநீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் கேட்டுக் கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









