ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு புதன்கிழமை காலை ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது ஒரு வீட்டிற்குள் மறைந்திருந்த இரு இளைஞா்களிடம் நடத்திய சோதனையில் ஏராளமான போதை மாத்திரைகள் பிடிபட்டன. இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீஸாா் விசாரித்ததில் அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (20), அரவிந்தன் (26) என்று தெரியவந்தது. போதை மாத்திரைகளை தங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வாங்கி வைத்துள்ளதாக போலீஸாரிடம் அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




