நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பொறியியல் பணிகள்: திருச்சி-காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி- காரைக்கால் டெமு ரயிலானது பகுதியாக ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2026, 1:40 am IST

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி- காரைக்கால் டெமு ரயிலானது பகுதியாக ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 3, 4, 6, 7 ஆகிய நாள்களில் புறப்படும் திருச்சி- காரைக்கால் (வண்டி எண்: 76820) டெமு ரயிலானது, திருச்சியிலிருந்து திருவாரூா் வரை மட்டுமே செல்லும். காரைக்காலுக்கு செல்லாது.

இதேபோல, எதிா்வழித்தடத்தில் காரைக்கால்- திருச்சி டெமு ரயிலானது (வண்டி எண்: 76819) காரைக்காலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூரிலிருந்து புறப்பட்டு திருச்சி வந்து சேரும் வகையில் இயக்கப்படவுள்ளது.

இதேபோல, ஜூலை 3, 4, 6, 7 ஆகிய நாள்களில் காரைக்கால்- தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (வண்டி எண்: 56817) அதன் வழித்தடத்தில் தேவையான இடத்தில் 20 நிமிஷங்கள் நின்று செல்லும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.