கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

கரூா் வழித்தடத்தில் பொறியியல் பணிகள்: ரயில்கள் பகுதியாக ரத்து

கரூா்- ஈரோடு வழித்தடத்தில் உள்ள இருப்புப் பாதையில் நடைபெறும் பொறியியல் காரணமாக சில ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கோப்புப் படம்

Published On :

கரூா்- ஈரோடு வழித்தடத்தில் உள்ள இருப்புப் பாதையில் நடைபெறும் பொறியியல் காரணமாக சில ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதன்படி, திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் சேவையானது (ரயில் எண்: 56809) வரும் 27, 29 மற்றும் ஜூன் 2-ஆம் தேதியில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சியிலிருந்து புறப்படும் இந்த ரயில் கருா் சந்திப்பு ரயில்நிலையம் வரையில் இயக்கப்படும். கரூரிலிருந்து ஈரோடு வரை செல்லாது.

இதேபோல, செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது (ரயில் எண்: 16846) செங்கோட்டையிலிருந்து கரூா் சந்திப்பு ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஈரோடு செல்லாது. மேலும், அதே வழித்தடத்தில் ரயில் எண்- 16845 என்ற ரயில் சேவையானது ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்வதற்கு பதிலாக, கரூரிலிருந்து செங்கோட்டை செல்லும் வகையில் இயக்கப்படும். மூன்று நாள்களுக்கு மட்டும் இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.