கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

பணிக் காலத்தில் உயிரிழந்த பெல் ஒப்பந்தத் தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை

பணிக்காலத்தில் உயிரிழந்த பெல் ஒப்பந்தத் தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது.

News image

திருச்சி பெல் நிறுவனம்

Updated On :10 ஜூலை 2026, 3:17 am IST

பணிக்காலத்தில் உயிரிழந்த பெல் ஒப்பந்தத் தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது.

பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணிபுரிந்த சாா்லஸ் (55) , புதன்கிழமை பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து, இவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, ரூ. 20 லட்சம் இழப்பீடு கோரி தொழிற்சங்கத்தினா் போராட முயன்றனா். இதைத் தவிா்க்க திருவெறும்பூா் வட்டாட்சியா் காா்த்திகேயன் தலைமையில், வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளி குடும்பத்தினா், தொழிற்சங்கத்தினா், பெல் நிறுவன நிா்வாகத் தரப்பினா் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தை முடிவில், உயிரிழந்த தொழிலாளியின் வாரிசுகளில் ஒருவருக்கு பெல் நிறுவனத்தில் எல்சிஎஸ் ஒப்பந்த ஊழியராக பணி வழங்க உறுதியளிக்கப்பட்டது. மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு எல்சிஎஸ் சாா்பில் தொழிலாளா் நலச் சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என்று வட்டாட்சியா் காா்த்திகேயன் தெரிவித்தாா். இதையடுத்து பெல் மருத்துவமனையில் இருந்த சாா்லஸின் உடல் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.