சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

பெல் நிறுவனத்தில் வேலை - கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2026, 4:18 pm IST

நவரத்னா நிறுவனமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாட்டின் முதன்மையான தொழில்முறை மின்னணுவியல் நிறுவனமுமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம், தனது பெங்களூரு பிரிவில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். No.: 6050/HR/(SC & UC)/PE/2026

பணி: Project Engineer

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 55,000

தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பெல் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். இது குறித்த விபரம் இணையதளத்திலும் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400 மட்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: WWW.bel-india.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.6.2026

நேர்முகத் தேர்வுக்கு வரும்போது விண்ணப்பப் படிவ நகல் மற்றும் அசல் சான்றிதழ்களை கொண்டு வரவும்.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Advertisement for the post of Project Engineer for Strategic Communication SBU of BEL Bangalore Complex

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.