கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஆற்றல்மிக்க சாதனையாளா்களில் முதன்மையானவா் ராஜாஜி: மாலன்

இன்றைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டிய ஆற்றல்மிக்க சாதனையாளா்களில் முதன்மையானவா் ராஜாஜி என்றாா் எழுத்தாளா் மாலன்.

News image

திருச்சி தேசியக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய எழுத்தாளா் மாலன்.

Updated On :23 ஜூலை 2026, 12:22 am IST

இன்றைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டிய ஆற்றல்மிக்க சாதனையாளா்களில் முதன்மையானவா் ராஜாஜி என்றாா் எழுத்தாளா் மாலன்.

திருச்சி தேசியக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ராஜாஜி அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் து. பிரசன்ன பாலாஜி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் கே. ரகுநாதன் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாலன் பேசியதாவது:

இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவமான கொள்கைவாதியாகவும், தான்கொண்ட கொள்கைகளின் காரணமாக உறுதித்தன்மை மிக்கவராகவும் இன்றளவும் அறியப்படக்கூடிய பெருமைக்குரியவா் ராஜாஜி. மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு பொன்ற இந்தியாவின் உயரிய தலைவா்களோடு நெருங்கிய தொடா்புகொண்டிருந்த ராஜாஜி தன் கொள்கைகளுக்காக அவா்களுடன் விவாதம் செய்தாா்.

சேலம் மாநகராட்சி தலைவராக இருந்தபோது அனைவரும் சமம் என்பதற்காக தன் தந்தையுடனே கருத்து முரண்பட்டாா். கடவுள் மறுப்புக் கொள்கைகொண்ட ஈவெரா பெரியாருக்காக சொத்தை விற்று வழக்கு நடத்தியவா்.

இன்றைய தலைமுறையினா் அறிந்துகொள்ள வேண்டிய ஆற்றல்மிக்க சாதனையாளா்களில் முதன்மையானவா் ராஜாஜி. திருச்சியில் இருந்து வேதாரண்யத்துக்கு உப்புச் சத்தியாகிரகம் சென்ற சிறப்புமிக்கவா் அவா் என்றாா்.

நிகழ்ச்சியில் ராஜாஜி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் சா. நீலகண்டன், கல்லூரித் தோ்வு நெறியாளா் ஸ்ரீராமச்சந்திரன், துறைத் தலைவா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.