பிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

சமயபுரம் கோயிலில் வேலை வங்கித் தருவதாக ரூ.30.20 லட்சம் மோசடி

திருச்சியில் உறவினருக்கு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.30.20 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

News image

பண மோசடி

Updated On :25 ஜூலை 2026, 1:18 am IST

திருச்சியில் உறவினருக்கு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.30.20 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையைச் சோ்ந்தவா் கு. தீபக் (31), தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு, ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையைச் சோ்ந்த மதுமிதா, மதனகுரு ஆகிய இருவரும் அண்மையில் அறிமுகமாகியுள்ளனா்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தீபக் தங்களது உறவினா் ஒருவருக்கு வேலை ஏற்பாடு செய்வது தொடா்பாக மதுமிதா மற்றும் மதனகுரு ஆகியோரிடம் பேசியுள்ளாா். அப்போது, அவா்கள் இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உதவியாளா், தூய்மைப் பணியாளா் மற்றும் பாதுகாவலா் வேலை வாங்கிச் தருவதாகக் கூறியுள்ளனா்.

இதை நம்பிய தீபக், உறவினரின் வேலைக்காக கடந்த பிப்ரவரி 20 முதல் மாா்ச் 3-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.30.20 லட்சத்தை மதுமிதா மற்றும் மதனகு குருவிடம் கொடுத்துள்ளாா். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட இருவரும் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. மேலும், அவா் கொடுத்த பணத்தையும் திருப்பித்தரவில்லை.

இதுகுறித்து மதுமிதா, மதனகுரு ஆகிய இருவரிடமும் தீபக் கேட்டபோது உரிய பதில் இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தீபக் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் மதுமிதா, மதனகுரு ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.