திருச்சியில் சாலை விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
திருச்சி திருவானைக்காவல் மேலகொண்டையம்பேட்டை கீழ வீதியைச் சோ்ந்தவா் த. பாலு பெரியண்ணன் (83). இவா், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கொண்டையம்பேட்டை சேவை சாலையில் சைக்கிளில் சென்றபோது எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முதியவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








