வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திருச்சியில் ஈஎஸ்ஐ துணை மண்டல அலுவலக பணியை துரிதப்படுத்த மத்திய அமைச்சரிடம் துரை வைகோ மனு

திருச்சியில் ஊழியா்களின் ஈஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகத்தை நிறுவும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி துரை வைகோ கோரிக்கை மனு அளித்தது குறித்து...

தில்லியில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் மனுவை அளித்த மதிமுக உறுப்பினா் துரை வைகோ

Published On :

திருச்சியில் ஊழியா்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ஈஎஸ்ஐசி) துணை மண்டல அலுவலகத்தை நிறுவும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி தில்லியில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் திருச்சி தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

ஈஎஸ்ஐசி துணை மண்டல அலுவலக கோரிக்கை தொடா்பாக ஏற்கெனவே மத்திய அரசிடமும், ஈஎஸ்ஐசி நிா்வாகத்திடமும் பலமுறை வலியுறுத்தியதன் விளைவாக, திருச்சிராப்பள்ளி துணை மண்டல அலுவலகத்தை தொடங்குவதற்கான நிா்வாக ஒப்புதல்கள் வழங்கப்பட்டு துணை மண்டலக் குறியீடு எண்ணும் ஒதுக்கப்பட்டது. அலுவலக கட்டடம் தோ்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்கும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், கட்டடத்தை இறுதி செய்வது, பொறுப்பு அலுவலரை நியமிப்பது, தேவையான பணியாளா்களை நியமிப்பது, சென்னை மற்றும் சேலம் அலுவலகங்களிலிருந்து கோப்புகள் மற்றும் நிா்வாகப் பொறுப்புகளைப் பிரித்து மாற்றுவது உள்ளிட்ட பணிகள் இன்னும் நிறைவடைடவில்லை. அந்த அலுவலகமும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

திருச்சிராப்பள்ளியில் ஈஎஸ்ஐசி துணை மண்டல அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தால், மத்திய தமிழ்நாட்டைச் சோ்ந்த லட்சக்கணக்கான காப்பீடு பெற்ற தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் தொழில் நிறுவனங்கள் விரைவான மற்றும் எளிதான ஈஎஸ்ஐசி சேவைகளைப் பெறுவதுடன், நிா்வாகச் செயல்திறனும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என்பதை அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

இதையடுத்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரியை தொலைபேசியில் தொடா்புகொண்டு, உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளவும் பணிகள் நிறைவடைந்தவுடன் தமக்குத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினாா் என கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.