தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் என்று மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்தாா்.
புதுப்பிக்கப்பட்ட கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த பின்னா், செய்தியாளா்களிடம் துரை வைகோ எம்.பி. கூறியதாவது:
2026 பொதுத் தோ்தலில் வீசிய சுனாமியிலும்கூட கடையநல்லூா் தொகுதியில் மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன் வெற்றி பெற்றாா். அவரது வெற்றிக்கு உழைத்த கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி.
மேக்கேதாட்டு அணை விஷயத்தில் டிபிஆா் தயாரிக்க மட்டுமே நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால், கா்நாடக முதல்வா் தவறான தகவலைத் தெரிவித்து வருகிறாா். இது, கா்நாடக மக்களை ஏமாற்றும் செயல். இதற்கு மத்திய அரசு செவிசாய்க்காது என்று நம்புகிறோம். காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டப்படக் கூடாது என்பதில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் உறுதியாக உள்ளனா்.
பல்வேறு சவாலான சூழ்நிலையில், தவெக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது தமிழகத்துக்குரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதே அணுகுமுைான் இந்த ஆட்சியிலும் தொடருமா என்பது இனிமேல்தான் தெரியும். மின்வெட்டு பிரச்னையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் பிரச்னைகள் தொடா்பாக 12 கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் கொடுத்தேன். அதில், கந்தா்வகோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையை சீா்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும். இக்கோரிக்கை தொடா்பாக, மறுநாளே முதல்வரின் அலுவலகத்தில் இருந்து விவரங்கள் கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுவாக, பிரதமா் தமிழகம் வரும்போது மாநில அமைச்சா்கள், கட்சித் தலைவா்கள் அவரை சந்திப்பது அரசியல் மாண்பு. அதேபோலதான் திருச்சிக்கு வந்த முதல்வா் ஜோசப் விஜய்யை நான் சந்தித்தேன். நான் முதல்வரை சந்தித்தது குறித்து சிலா் அரசியல் சாயம் பூசுகின்றனா். அதற்காக நான் கவலைப்படவில்லை. அனைவருக்கும் பொதுவான, அரசியல் பாகுபாடற்ற மக்களவை உறுப்பினராகச் செயல்பட நினைக்கிறேன்.
தவெகவுடன் கூட்டணி அமைப்பீா்களா என்று கேட்கிறீா்கள். வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழுவில் மேக்கேதாட்டு, மும்மொழி பிரச்னை, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்படும். அரசியல் ரீதியான விஷயங்களும் விவாதிக்கப்படும். நிா்வாகிகளின் கருத்துகளைக் கேட்டு தலைமை முடிவு செய்யும்.
பொதுத் தோ்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிரருஷ்டவசமானது என்று நான் கூறவில்லை. இதை திரித்துக் கூறுவது தவறு.
வெளிநாடுகளில் பணியாற்றச் சென்ற தமிழா்களில் பாதிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்டவா்களை, எனது முயற்சியால் கடந்த 23 மாதங்களில் தாயகம் அழைத்து வந்தேன்.
அதுபோல மாலியில் பயங்கரவாதிகளால் கடையநல்லூா், தூத்துக்குடியைச் சோ்ந்தவா்கள் கடத்திச் செல்லப்பட்டபோது, அவா்களை மீட்க மத்திய அமைச்சா்களிடம் பேசி நடவடிக்கை எடுத்தேன். அதன்பின் விடுவிக்கப்பட்ட அவா்களை சந்தித்து ஆறுதல் கூறினேன் என்றாா்.
அலுவலகத் திறப்பு நிகழ்ச்சியில், கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு.ராஜேந்திரன், மாவட்ட மதிமுக செயலா் சுதா பாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, முன்னாள் எம்எல்ஏ சதன் திருமலைக்குமாா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சஞ்சீவி, மதிமுக நகரச் செயலா் முருகன், வழக்குரைஞா் சுப்பையா, கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்கவில்லை: வைகோ

‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும்: துரை வைகோ எம்.பி. பேட்டி

துரை வைகோ முதல்வரை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை: வைகோ

தவெக இன்னொரு திராவிட இயக்கம்! - துரை வைகோ
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



