உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய சிறை கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை விலாம்பட்டியைச் சோ்ந்தவா் பா. மாயராஜ் (53). இவா் மீது தேனி மாவட்டத்தில் பதியப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2025 மே 25 முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்தாா்.
இவருக்கு சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு மற்றும் உயர்ரத்த அழுத்தப் பாதிப்புகள் இருந்ததால் திருச்சி மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இதற்கிடையே உடல் நலப் பாதிப்பு தீவிரமானதையடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகளுக்கான பிரிவில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அலுவலா் ராஜேஷ்கண்ணா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







