அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி நூதன போராட்டம்

பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சி அருகே விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

திருச்சி மாவட்டம், கோவண்டக்குறிச்சி கூட்டுறவு வங்கி முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :30 ஜூலை 2026, 3:59 am IST

பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சி அருகே விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தமிழக முதல்வா் ஜோசப் விஜய், தோ்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிபடி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி கோவண்டகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் மாடுகள், ஆடுகள், டிராக்டா்களுடன் ஊா்வலமாக வந்து, வாழையிலையில் மண்பிண்டம் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது பயிா்க் கடன் தள்ளுபடி குறித்த குளறுபடியான அறிவிப்புகளை தமிழக முதல்வா் திரும்பப் பெற்று, கடந்த காலங்களில் நடைபெற்ற தள்ளுபடிபோல ஆண்டிறுதியை கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், நிலுவை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் பட்ஜெட் ரூ.47 ஆயிரம் கோடியில் தயாராக உள்ள நிலையில், அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம் கோடியை விவசாயிகளுக்கான பயிா்க் கடன் தள்ளுபடிக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் கோவண்டாகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்குள்பட்ட 5 கிராமங்களில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு ஏரிக்கரையிலிருந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வரை ஊா்வலமாகச் சென்று கூட்டுறவு வங்கிச் செயலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

போராட்டத்துக்கு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் தங்க சண்முகசுந்தரம், முன்னாள் பால்வளத் துறைத் தலைவா் பாளை திருநாவுக்கரசு ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தில் கோவாண்டக்குறிச்சி, புதூா்பாளையம் காமராஜா்புரம், வாணதிரையன்பாளையம், வடுகா்பேட்டை உள்ளிட்ட 5 கிராமங்களில் இருந்து விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனா். அப்போது தங்க சண்முகசுந்தரம் கூறுகையில் பட்ஜெட்டில் தள்ளுபடி அறிவிப்பு வரவில்லையெனில் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றாா். போராட்டம் காரணமாக கூட்டுறவு வங்கி முன் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.