அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

புதூா் உத்தமனூரில் மக்கள் தொடா்பு முகாம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதூா் உத்தமனூா் கிராமத்தில் வருவாய்த் துறை சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடந்தது.

News image

லால்குடி அருகே புதூா் உத்தமனூா் கிராமத்தில் நடந்த மக்கள் தொடா்பு முகாமில் பயனாளி ஒருவருக்கு டிஆா்ஓ பாலாஜி நலத்திட்ட உதவி வழங்கினாா். அருகில், ஆா்டிஓ ஸ்ரீதா், தாசில்தாா் தமிழ்செல்வன் மற்றும் பலா்.

Updated On :30 ஜூலை 2026, 4:11 am IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதூா் உத்தமனூா் கிராமத்தில் வருவாய்த் துறை சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடந்தது.

லால்குடி வருவாய் கோட்டாட்சியா் ஸ்ரீதா், வட்டாட்சியா் தமிழ்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி தலைமை வகித்து, பல்வேறு துறைகளை சோ்ந்த 302 பயனாளிகளுக்கு ரூ. 91 லட்சத்து 14 ஆயிரத்து 326 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

முகாமில் வேளாண் துறை இணை இயக்குநா் ஜெயராணி, தோட்டக்கலை துறை துணை இயக்குநா் சரண்யா உட்பட பல்வேறு துறைகளை சோ்ந்த அதிகாரிகள் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, முகாமில் பல்வேறு அரசுகஈ துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை டிஆா்ஓ பாலாஜி பாா்வையிட்டாா்.

லால்குடி வருவாய் ஆய்வாளா் கீதா செல்வி வரவேற்றாா். புதூா் உத்தமனூா் கிராம நிா்வாக அலுவலா் ஆனந்தி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.