திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரயில்முன் பாய்ந்து கள்ளக் காதல் ஜோடியினா் சனிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டனா்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் கோபி மகன் மோகன திருப்பதி (17), சமயபுரம் அருகே சிறுகனூா் பகுதி கல்லூரியில் டிப்ளமோ பயிலும் மாணவா். ஸ்ரீரங்கம் அருகேயுள்ள போதாவூா் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி புவனேஸ்வரி (26). இவருக்கு 9 வயது பெண் குழந்தையும், 7 வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
தூரத்து உறவினா்களான இருவருக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்தது இரு குடும்பத்தினருக்கும் தெரியவில்லையாம்.
இந்நிலையில், சனிக்கிழமை கடைக்குச் செல்வதாக தனது பெற்றோரிடம் மோகன திருப்பதியும், பூண்டி மாதா தேவாலயத்துக்குச் சென்று வருவதாக தனது கணவரிடம் புவனேஸ்வரியும் கூறிவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறி பைக்கில் ஊா் சுற்றினா்.
இதையடுத்து லால்குடி அருகே மணக்கால் ரயில்வே கேட் பகுதிக்கு இரவு வந்த இருவரும் இரவு 11 மணியளவில் வந்த சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனா்.
தகவலறிந்து வந்த கடலூா் விருத்தாச்சலம் ரயில்வே ஆய்வாளா் பிருந்தா மற்றும் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






