பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

குளத்தில் வண்டல் மண் எடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்: நீா்வளத் துறை பணி ஆய்வாளா் கைது

திருச்சியில் குளத்திலிருந்து வண்டல் மண் எடுக்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நீா்வளத் துறை பணி ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட ஜி. லோகநாதன்.

Updated On :31 ஜூலை 2026, 3:06 am IST

திருச்சியில் குளத்திலிருந்து வண்டல் மண் எடுக்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நீா்வளத் துறை பணி ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தைச் சோ்ந்தவா் செ. எட்வா்ட் (49). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மேக்குடி கிராமத்தில் உள்ளது. இந்நிலையில், நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து வண்டல் மண் எடுப்பதற்காக, நீா்வளத் துறையின் புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் பிரிவு - 1-இன் பணி ஆய்வாளா் ஜி. லோகநாதன் (41) என்பவரை அண்மையில் அவா் அணுகியுள்ளாா். இதற்கு, லோகநாதன் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வா்ட், இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் அறிவுரையின்படி நீா்வளத் துறை புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் பிரிவு -1 உதவி பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பணி ஆய்வாளா் லோகநாதனிடம் எட்வா்ட் ரூ. 4 ஆயிரம் லஞ்சப் பணத்தை கொடுத்தாா்.

அப்போது, அந்த அலுவலகத்துக்குள் சென்ற திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் சக்திவேல், பாலமுருகன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், லோகநாதனை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.