தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் ‘போக்ஸோ’வில் கைது

திருவெறும்பூா் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக, 56 வயது நபரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

பாலியல் தொல்லை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

திருவெறும்பூா் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக, 56 வயது நபரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (56). இவா், தனது வீடு அருகே உள்ள சிறாா்களுக்கு அவ்வப்போது இனிப்புகள் வாங்கி கொடுத்து வந்துள்ளாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு வியாழக்கிழமை இனிப்பு கொடுத்து தகாத முறையில் நடந்துள்ளாா்.

இதுதொடா்பாக, சிறுமியின் தாயாா் அளித்தப் புகாரின் பேரில், திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா், ஜெயராஜ் மீது போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.