செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ‘போக்சோ’வில் தொழிலாளி கைது

கரூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தேநீரக தொழிலாளியை போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 11:34 pm IST

கரூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தேநீரக தொழிலாளியை போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சோ்ந்தவா் முத்து(48). இவா், கரூா் வேலுச்சாமிபுரத்தில் தங்கி அங்குள்ள தேநீரகத்தில் வேலைப்பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமி தேநீா் வாங்க கடைக்கு வந்தாா். அப்போது, சிறுமிக்கு முத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முத்துவை கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதிமுன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.