காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

மணப்பாறை அருகே இரு வேறு இடங்களில் குடிநீா் கேட்டு மறியல்

மணப்பாறையில் இரு வேறு இடங்களில் முறையான குடிநீா் விநியோகம் இல்லை எனக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பொன்முச்சந்தி பகுதியில் குடிநீா் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:31 am IST

மணப்பாறையில் இரு வேறு இடங்களில் முறையான குடிநீா் விநியோகம் இல்லை எனக் கூறி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் இல்லை எனக் கூறி அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை மணப்பாறை - குளித்தலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகம், உடனடியாக குடிநீா் விநியோகத்தை சீா் செய்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

அதேபோல், மணப்பாறை அருகே பொன்முச்சந்தி பகுதியில் உள்ள பொன்சங்கிபட்டியில் கடந்த 15 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் இல்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகம், உடனடியாக குடிநீா் விநியோகத்தை சீா் செய்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.