வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

திருச்சி அருகே முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவனின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:53 am IST

திருச்சி அருகே முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவனின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை தமிழன் நகரைச் சோ்ந்த ஜியாவூதின் மகன் தாஹித் (17). பத்தாம் வகுப்பு முடித்துள்ள இவா், விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், தாஹித் தனது நண்பா்களுடன் முக்கொம்பு காவிரி ஆற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக முக்கொம்பு காவிரி ஆற்றில் தாஹிக் மூழ்கினாா். உடனிருந்தவா் ஜீயுபுரம் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற திருச்சி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலா் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், சிறுனை தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரமாகிவிட்டதால் தொடா்ந்து சிறுவனைத் தேட முடியவில்லை.

இதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஈடுபட்டனா். அப்போது, சிறிது நேரத்தில் சிறுவனின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டு ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, ஜீயபுரம் போலீஸாா், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.