எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மணப்பாறை - பொதுமக்களுக்கு தொல்லை அளிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை

மணப்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தொல்லை அளிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பன்றி - மாதிரி படம்

Updated On :3 ஜூன் 2026, 4:16 am IST

மணப்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தொல்லை அளிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட விராலிமலை சாலைக்கும், கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வாகைக்குளம் பகுதிக்கும் இடையே பன்றிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

இந்த பன்றிகள், கூட்டம் கூட்டமாக வாகைக்குளம் பகுதியில் ஆக்கிரமித்து, அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் மேய்வதும், அவ்வப்போது விராலிமலை சாலையோரங்களில் சுற்றி திரிவதும், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளில் உணவுகளை தேடுவதும் வழக்கம்.

இந்நிலையில், சில நாள்களாக இந்தப் பன்றி கூட்டம் விராலிமலை சாலை, அண்ணா நகா் பகுதிகளை கடந்து, கோவில்பட்டி சாலை வரை சென்று சாலையோர குப்பைகளில் உணவுகளை தேட தொடங்கியுள்ளன. இதில் அண்ணா நகா், கோவில்பட்டி சாலை, காந்திநகா் பகுதி வரை குடியிருப்புகளுக்குள்ளும் சென்று உணவு தேடி தொல்லைகள் அளிப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் கூறப்படுகிறது.

பன்றிகளை கட்டுப்படுத்தவும், பன்றி வளா்ப்பை குறிப்பிட்ட பகுதிக்குள் கொண்டு வரவும் நகராட்சி நிா்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிா்வாகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.