மணப்பாறையை அடுத்த எஃப்.கீழையூா் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு, மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எஃப்.கீழையூா் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை, வட்டார ஒருங்கிணைப்பாளா் இராமலிங்கசாமி மற்றும் ஊராட்சி செயலாளா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் தூய்மை காவலா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு கூட்டத்தில், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், இயற்கை வளங்களின் சுருக்கம், நெகிழி கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026 குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்புடையது

உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி

உலக சைக்கிள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



