அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூா் மற்றும் முத்தபுடையான்பட்டி பகுதிகளில் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மரவனூரில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்த விவசாயிகள்.

Updated On :11 ஜூன் 2026, 3:50 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூா் மற்றும் முத்தபுடையான்பட்டி பகுதிகளில் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறுகுறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என தவெக தோ்தல் வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது கடன் தள்ளுபடிக்கு நிபந்தனைகள் விதிப்பதை கண்டித்தும், தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மரவனூா் மற்றும் முத்தபுடையான்பட்டி பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூ. நிா்வாகிகள் ஏ. சண்முகம், டி. சந்திரசேகா், ஆா். பழனிச்சாமி, மாசிலாமணி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.