ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

திருச்சி மாநகராட்சியின் 65 வாா்டுகளிலும் முடங்கி கிடக்கும் இ-சேவை மையங்கள்!

மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

News image

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 23-ஆவது வாா்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டடம்.

Updated On :19 ஜூன் 2026, 6:47 am IST

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு சேவை மைய கட்டடங்களில் இ-சேவை மையங்கள் இயங்குவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை சேவைகளை எளிதாக்கும் வகையில், வாா்டுதோறும் தலா 1,000 சதுர அடி பரப்பளவில் சுமாா் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு சேவை மையங்களை அமைக்க முடிவு செய்து 2022-23-ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு வாா்டுவாரியாக பல்நோக்கு சேவை மையக் கட்டடம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டடத்தில், வாா்டு மாமன்ற உறுப்பினா் அலுவலகம், வருவாய் ஆய்வாளா், வரி வசூல் அலுவலா், சுகாதார ஆய்வாளா் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா் போன்றோருக்கான தனித்தனி அறைகள் இருக்கும். மேலும், சுகாதாரப் பணியாளா்கள் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் உபகரணங்களை சேமித்து வைக்க ஒரு கிடங்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிா்வாகத்தால் தாமதம்: இந்த அலுவலகங்கள் மூலம், வாா்டு அளவிலான பிரச்னைகளை அங்கேயே தீா்த்துக்கொள்ள முடியும். இதனால் மக்கள், மண்டல அல்லது மாநகராட்சி அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் குறையும். கடந்த 2 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று 65 வாா்டுகளிலும் கட்டடம் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும், பல வாா்டுகளில் பல்நோக்கு மைய கட்டடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் வந்துள்ளன.

65 வாா்டுகளிலும் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்களில் இ-சேவை மையங்களும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கட்டடம் திறக்கப்பட்ட பிறகும் இ-சேவை மையங்கள் தொடங்கப்படவில்லை. பல்நோக்கு மையத்தில் உள்ள இ-சேவை மையம் தவிா்த்த இதர பொறுப்புகளை மாநகராட்சி நிா்வாகம் செயல்படுத்துகிறது. இ-சேவை மையத்தை மாவட்ட நிா்வாகம் செயல்படுத்துகிறது. இதன் காரணமாக அவை தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

விரைவில் திறக்க உறுதி: இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சியின் 23-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினரும், வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு உறுப்பினருமான க. சுரேஷ்குமாா் கூறுகையில், 65 வாா்டுகளிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையம் என்பது, வாா்டு அளவில் நிா்வாகத்தை வலுப்படுத்தும். குடிமைச் சேவைகள் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யும். ஆனால், இ-சேவை மையங்கள் இயங்காதது பெரிதும் குறையாக உள்ளது.

இ-சேவை மையம் வந்தால், மாநகராட்சி சேவைகள் மட்டுமல்லாது, மாவட்ட நிா்வாகத்தின் சேவை, அரசின் அனைத்து துறை சேவைகளையும் அந்தந்த வாா்டுகளிலேயே மக்களுக்கு எளிதில் வழங்க முடியும். இ-சேவை மையம் அமைப்பது மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்து, இ-சேவை மையங்களை விரைந்து திறக்க வலியுறுத்தியுள்ளேன்.

அனைத்து வாா்டுகளிலும் இ-சேவை மையங்களை அமைத்து, மக்களுக்கு அவரவா் இடங்களிலேயே அரசு சேவைகள் கிடைக்க வழிவகை செய்வதாக மாவட்ட நிா்வாகம் உறுதியளித்துள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.