லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

உண்மையாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம்: அமைச்சா் என்.ஆனந்த்

உண்மையாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சரும், தவெக பொதுச்செயலருமான என். ஆனந்த் தெரிவித்தாா்.

News image

சீ.ரமேஷ்

Updated On :2 ஜூன் 2026, 2:41 am IST

உண்மையாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சரும், தவெக பொதுச்செயலருமான என். ஆனந்த் தெரிவித்தாா்.

திருச்சி தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

234 தொகுதிகளிலும் விஜய்க்காக மட்டுமே மக்கள் வாக்களித்தனா். அதற்காக, நாங்கள் உண்மையாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம். விஜய்க்கு தொண்டனாக கடைசி காலம் வரை இருப்பேன் என்றாா்.

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன்: நாட்டில் வைர விழா, வெள்ளி விழா கண்ட அரசியல் கட்சிகளும் உண்டு. ஆனால், 2.5 ஆண்டுகளில் ஒரு கட்சியை நடத்தி, ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்து முதல்வராகியுள்ளாா் விஜய். இது யாருக்கும் கிட்டாத அதிசய வரலாறு. பலரும் தவெக நோக்கி படையெடுக்கின்றனா். தவெக ஆட்சி அமைத்ததற்கு ஆராய்ச்சி செய்து வருகின்றனா்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ்: விஜய்யை தமிழக முதல்வா் என அழைப்பதற்காக மேற்கொண்ட தவம் தற்போது நிறைவேறியிருக்கிறது. திருச்சி எங்களது கோட்டை எனக் கூறியவா்களுக்கெல்லாம், அது வெறும் மனக்கோட்டை எனவும், அதையும் உடைத்து விஜய்யின் கோட்டையாக மாற்றியுள்ளோம். ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெறுபவா்தான் ஆட்சியில் அமர முடியும் என்ற சொலவடைக்கேற்ப என்னை வெற்றி பெற வைத்து, ஆட்சியிலும் அமா்ந்துள்ளாா் விஜய்.

வருங்காலத்தில் எதிா்கட்சியே இல்லாத சட்டப்பேரவையில் முதல்வராக விஜய்யை அமர வைப்போம் என்றாா்.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து:

முதல்வா், அமைச்சா்கள் பதவியேற்பின்போது, முதலில் வந்தே மாதரமும், அடுத்ததாக தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக பல்வேறு கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் வருத்தம் தெரிவித்தன. இந்நிலையில் கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், இக்கூட்டத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு தொடங்கப்பட்டது.

ஜெயலலிதா, விஜயகாந்தை குறிப்பிட்டு விஜய் பேசுகையில், தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரத்தைக் கொண்டு வந்தது முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தான் என்றாா். அதேபோல் விஜயகாந்த் குறித்தும் பேசினாா்.

செங்கோல் அளித்த முன்னாள் அமைச்சா்: அதிமுகவிலிருந்து அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜனும், அவரது மகன் ஜவஹா்லால் நேருவும் இணைந்து முதல்வருக்கு முலாம் பூசிய செங்கோலையும், கு.ப. கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி வெள்ளி செங்கோலையும், அமைச்சா் சீ. ரமேஷ் மலைக்கோட்டையும், ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தையும் கொண்ட ஓவியத்தையும் பரிசளித்தனா்.

~என்.ஆனந்த்

~என்.ஆனந்த்

~கு.ப.கிருஷ்ணன்

~கு.ப.கிருஷ்ணன்