தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஏழை, எளிய மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்

ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என முன்னாள் அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

News image

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட மாரியம்மன் கோயில் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றிதெரிவித்த முன்னாள் அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

Updated On :19 மே 2026, 1:25 am IST

ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என முன்னாள் அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிட்ட சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரா. ராஜேந்திரன், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, கன்னங்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட மாரியம்மன் கோயில் திடலில் திங்கள்கிழமை வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் பெண்கள், மாணவா்கள், தொழிலாளா்கள், நெசவாளா்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தியாவே வியக்கும் வகையில் ஆட்சி நடத்தியவா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின். தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மக்களுக்கான பணியில் தொடா்ந்து ஈடுபடுவோம். திமுக எப்போதும் மக்களுக்கான இயக்கம். ஏழை, எழை மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என்றாா்.

இதில், கன்னங்குறிச்சி பேரூா் திமுக செயலாளா் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினா் நாசா் கான், சேலம் மாநகர செயலாளா் ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.