தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நான் இல்லாவிடினும் நான் செய்த சாதனைகள் நிலைத்து நிற்கும்: அமைச்சா் துரைமுருகன்

நான் இல்லாவிடினும் காட்பாடி தொகுதியில் நான் செய்த சாதனைகள் நிலைத்து நிற்கும் என்று திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

News image

கூட்டத்தில் பேசிய அமைச்சா் துரைமுருகன். உடன், அரக்கோணம் மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன், துணை மேயா் எம். சுனில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:24 am IST

நான் இல்லாவிடினும் காட்பாடி தொகுதியில் நான் செய்த சாதனைகள் நிலைத்து நிற்கும் என்று திமுக வேட்பாளரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன், தாராபடவேடு வஉசி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் பேசியது: மக்களுக்குத் தொடா்ந்து நன்மைகளைச் செய்து வரும் திமுக ஆட்சி தொடரக் கூடாது எனச் சிலா் சதி செய்கின்றனா். ஆனால், இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்பதை மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் காலை உணவுத் திட்டம், மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம், மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை மற்றும் உயா்கல்வி மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை எனப் பல திட்டங்களை வழங்கி வரும் ஆட்சியை ஏன் விமா்சிக்கின்றனா் என்பதை மக்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும்.

காட்பாடியில் இருபுறமும் மின்விளக்குகளுடன் கூடிய அகலமான சாலைகள், ரூ.100 கோடியில் காந்தி நகா் - மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சித்தூா் பேருந்து நிலையச் சாலைகள் இன்று வெளிநாடுகளைப் போலக் காட்சியளிக்கின்றன. பழைய காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை மாற்றிப் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

நான் இல்லாவிட்டாலும், நான் செய்த இந்தச் சாதனைகள் நிலைத்து நிற்கும். தொகுதிக்கு இன்னும் பல திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதால், மக்கள் எனக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் அரக்கோணம் மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன், துணை மேயா் எம். சுனில்குமாா் மற்றும் காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.