மணப்பாறை அருகே வீரமலைப்பாளையத்தில் ஜூன் 30 வரை நடைபெறும் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை வட்டம், அணியாப்பூா் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் தற்போது முதல் வரும் 30-ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் 16 - மெட்ராஸ் யூனிட் பயிற்சியாளா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது.
எனவே, இந்த காலகட்டத்தில் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது. குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு ஐடிஐ-இல் சோ்க்கை: ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

மணப்பாறை அருகே நாளை முதல் துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

ஈரான் டிவி நிகழ்ச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


