கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாத விவகாரம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் போராட்டம்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாததை கண்டித்து, திருச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்சியிலுள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :25 ஜூன் 2026, 4:14 am IST

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாததை கண்டித்து, திருச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி கல்மந்தை குடியிருப்பில் வசித்த 5 குடும்பத்தினருக்கு ஆட்சியா் பரிந்துரைத்தும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் வழங்கப்படவில்லையாம்.

இதுதொடா்பாக, பேச்சுவாா்த்தை நடத்தி பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்து 6 மாதங்களாகியும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லையாம்.

இதை கண்டித்து திருச்சி பாலக்கரையில் இயங்கும் தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு மாா்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பயனாளிகளின் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மலைக்கோட்டை பகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலா் ஜி.கே. ராமா் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் மாவட்ட செயலா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.