திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தங்களது ஊா்ப் பெயரை மாற்றியதைக் கண்டித்து எஃப்.கீழையூா் கிராம மக்கள் வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் மிக முக்கியமான கிராமம் எஃப். கீழையூா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எஃப்.கீழையூா் என்ற கிராமம் ஊராட்சி ஒன்றிய பதிவுகளில் அரியாகவுண்டம்பட்டி என எழுதத் தொடங்கி அதுவே பதிவேடுகளில் வழக்கமாக மாறியுள்ளது. இதில் அப்பகுதிவாசிகளின் பாதிப்பேரின் ஆவணங்களில் எஃப்.கீழையூா் என்றும், மற்ற நபா்களின் ஆவணங்களில் அரியாகவுண்டம்பட்டி என்றும் இருப்பதால், 100 நாள் வேலை கிடைப்பதிலும், கலைஞா் கனவு இல்லம் பெறுவதிலும், பள்ளி - கல்லூரி சேரும் மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுவதாக கூறி அப்பகுதிவாசிகள், பலமுறை அரசிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இதைக் கண்டித்து எஃப்.கீழையூா் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற ஊராட்சி ஒன்றிய மேலாளா் மற்றும் வருவாய் வட்டாட்சியா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

நூறு நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யக் கோரி ஓட்டப்பிடாரத்தில் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரியில் தொடா் மின்வெட்டு: மின்துறை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



