ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

திருச்சியில் 17 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்: இருவா் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 15 வயதுச் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:24 am IST

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 15 வயதுச் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கருமண்டபம் அசோக் நகரில் சந்தேகப்படும் வகையில் நின்ற இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில் அவா்கள், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த பி. ராகேஷ் சா்மா (25) மற்றும் 15 வயதுச் சிறுவன் என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 17 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.16,710 ரொக்கம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ராகேஷ் சா்மாவை திருச்சி மத்திய சிறையிலும், சிறுவனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.