தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

போசம்பட்டியில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி அருகேயுள்ள போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

போசம்பட்டி அரசுப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முக உருவ வடிவில் அமா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 4:25 am IST

திருச்சி அருகேயுள்ள போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியா் எஸ். சற்குணன் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான தொடா் முழக்கப் பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வலியுறுத்தும் வகையில் சிரிக்கும் முக உருவில் (ஸ்மைலி) அமா்ந்து மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் போசம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் கலைச்செல்வி, தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

லால்குடி அரசுக் கல்லூரியில்...லால்குடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பேரணியை கல்லூரி முதல்வா் த. ஜெயகுமாா் தொடங்கிவைத்தாா். முன்னதாக, கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில், காணக்கிளியநல்லூா் காவலா்கள் மனோஜ்குமாா், காா்த்திக், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.