ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஜூன் 20-இல் திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலின் வழித்தடம் மாற்றம்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (22627) ஜூன் 30-ஆம் தேதி மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:40 am IST

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (22627) ஜூன் 30-ஆம் தேதி மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இதையொட்டி திருச்சியில் இருந்து ஜூன் 30 காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோயில் டவுன், குழித்துறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, மாற்றுப் பாதையில் விருதுநகா், ராஜபாளையம், தென்காசி, கொல்லம் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். ஜூன் 30-ஆம் தேதி கூடுதலாக தென்காசி, செங்கோட்டை, கொல்லம் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

தாமதமாக புறப்படும் ரயில்: சென்னை எழும்பூா் - நாகா்கோயில் வந்தே பாரத் ரயில் (20627) ஜூன் 30 அதிகாலை 5 மணிக்கு புறப்படுதற்குப் பதிலாக 45 நிமிஷம் காலதாமதமாக 5.45 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் நாகா்கோயில் - சென்னை எழும்பூா் வந்தே பாரத் ரயில் (20628) வழக்கமாக புறப்படும் பிற்பகல் 2.20 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் 10 நிமிஷம் காலதாமதமாக 3.30 மணிக்குப் புறப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.