எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில்: ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை தாமதமாக புறப்படும்

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில்: ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை தாமதமாக புறப்படும்

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 12:31 am IST

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை (ஜூன் 20, 24 தவிா்த்து) 75 நிமிஷங்கள் காலதாமதமாக புறப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

வாஞ்சி மணியாச்சி - நாகா்கோயில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணியால் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22627) ஜூன் 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் வழக்கமான நேரத்தைக் காட்டிலும் 75 நிமிஷம் காலதாமதமாகப் புறப்படும்.

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக காலை 7.15 மணிக்கு புறப்படும் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் மேற்கண்ட தினங்களில் 75 நிமிஷங்கள் கால தாமதமாக காலை 8.30 மணிக்குத்தான் புறப்படும்.

ஜூன் 24-இல் மாற்று வழியில் இயக்கம்:

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22627) ஜூன் 24-ஆம் தேதி சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோயில் டவுன், குளித்துறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூா் மற்றும் கொல்லாம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Trichy - Thiruvananthapuram Central Superfast Express: Delayed departure from June 15 to June 30.