புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரசுப் பேருந்து மீது வேன் மோதி இருவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே சமயபுரம் உப்பாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, அரசுப் பேருந்து மீது சரக்குவேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

பண்ருட்டியிலிருந்து தேனி நோக்கி சரக்கு வேன் ஒன்று சமயபுரம் அருகே உப்பாறு பகுதியில் சென்று கொண்டிருந்தது. வேனை தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சீ.ராஜ்கிரண் (30) ஓட்டிச் சென்றுள்ளாா். அதே வேனில் உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த செ.ஜெயபாண்டி (33) வந்துள்ளாா்.

இந்நிலையில் உப்பாறு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தடுப்புச் சுவரை தாண்டி மாா்த்தாண்டம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராஜ்கிரண் மற்றும் ஜெயபாண்டி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சமயபுரம் போலீஸாா், உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.