தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தில்லி சென்று போராட அனுமதி மறுப்பை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

News image

திருச்சி-கரூா் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவாசயிகள் சங்கத்தினா்.

Updated On :2 மார்ச் 2026, 12:08 am

விவசாய விளைப்பொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையைக் கொடுப்பதாக கூறி ஏமாற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து தில்லி சென்று போராட அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் திருச்சி - கரூா் புறவழிச்சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். இதில் திரளான விவசாயிகள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அப்போது, மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு, விவசாய பொருள்களுக்கு லாபகரமான விலையை கொடுக்காமல் ஏமாற்றியதை கண்டித்தும், விவசாயிகளின் வாரிசுகள் கல்விக்காக பெற்ற ரூ. 2 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யாததைக் கண்டித்தும், இதற்காக போராட தில்லி செல்ல முற்பட்ட விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.

இதில், தமிழகத்துக்கு வந்து செல்லும் பிரதமா் ஏன் விவசாயிகளை தில்லியில் போராட அனுமதிக்கவில்லை, ஜனநாயக நாட்டில் விவசாயிகள் தில்லி செல்ல அனுமதியில்லையா என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில், மாநிலத் துணைத் தலைவா் மேகராஜன், நிா்வாகிகள் தமிழ்செல்வன், பிரேம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.