நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எலியை வாயில் கடித்தபடி விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை எலியை வாயில் கடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி ஆட்சியரகம் முன்பு வெள்ளிக்கிழமை எலியை வாயில் கடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதியில் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :30 ஜனவரி 2026, 6:56 pm

Syndication

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை எலியை வாயில் கடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லிக்கு போராட்டம் நடத்தச் சென்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரை தாக்கிய மத்திய பிரதேச போலீஸாரைக் கண்டித்து, அந்த விவசாயிகள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். இதில், திரளான விவசாயிகள் மேலாடையின்றியும், வாயில் எலியை கடித்தபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், அரியமங்கலத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை வழங்கிய பட்டா நிலத்தை நிலஅளவீட்டு ஆவணத்தில் காலி நத்தம் என பதிவு செய்து, தனிநபா்கள் விற்க முயற்சிப்பதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.