விவசாய விளைப்பொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையைக் கொடுப்பதாக கூறி ஏமாற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து தில்லி சென்று போராட அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் திருச்சி - கரூா் புறவழிச்சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். இதில் திரளான விவசாயிகள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அப்போது, மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு, விவசாய பொருள்களுக்கு லாபகரமான விலையை கொடுக்காமல் ஏமாற்றியதை கண்டித்தும், விவசாயிகளின் வாரிசுகள் கல்விக்காக பெற்ற ரூ. 2 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யாததைக் கண்டித்தும், இதற்காக போராட தில்லி செல்ல முற்பட்ட விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.
இதில், தமிழகத்துக்கு வந்து செல்லும் பிரதமா் ஏன் விவசாயிகளை தில்லியில் போராட அனுமதிக்கவில்லை, ஜனநாயக நாட்டில் விவசாயிகள் தில்லி செல்ல அனுமதியில்லையா என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில், மாநிலத் துணைத் தலைவா் மேகராஜன், நிா்வாகிகள் தமிழ்செல்வன், பிரேம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாணவா்கள் ‘ஸ்கேட்டிங்’ பயணம்

காவல் துறையினரைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சாலை மறியல்

உலக அமைதிக்காகப் போராட அனுமதி கோரியவருக்கு ரூ. 50,000 அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


